பதிவை எப்படி எழுதுவது , அதன் விதிமுறை என்ன மற்றும் பதிவை எப்படி வெளியிடுவது_How to write blogger post_what is blogger Regulation _

0

பதிவை எப்படி எழுதுவது , அதன் விதிமுறை என்ன மற்றும் பதிவை எப்படி வெளியிடுவது-

How to write blogger post,what is blogger Regulation 



இந்த பதிவை நாம் சற்று விரிவாகவும் விளக்கமாகவும் பார்ப்போம்

பதிவை எப்படி எழுதுவது ?


   பதிவை நீங்கள் தமிழ் ,ஆங்கிலத்திலும் எழுதலாம் . நீங்கள் ஆங்கிலத்தில் பதிவை எழுதினால் அது சிறப்பு , இதன் மூலம் அனைத்து விதமான அம்சங்களும் உங்களுக்கு உண்டு . ஆனால் நீங்கள் தமிழில் பதிவை எழுதுவராயின் உங்களுக்கு சில சிக்கல்கள் உண்டு

தமிழில் பதிவை எழுதுபவர்களுக்கு என்ன சிக்கல் , அதற்க்கான தீர்வு என்ன ?


 எதற்கு  என்று கேட்பீர்கலாயிர் நீங்கள் ப்ளாகர் மூலம் பணம் சம்பாதிக்க உதவும் Google Adsence என்ற இணையதளம் ஆங்கில மொழி ப்ளாக்கரை ஏற்றுகொள்ளுமே தவிர தமிழ் மொழி   ப்ளாக்கரை ஏற்றுகொள்ளாது

எனவே நீங்கள் இதற்காக அஞ்ச வேண்டாம் உங்களுக்காகவே தமிழ் மொழியை ஏற்றுகொள்ளும் மற்ற பல நேர்மையான இணையதளங்கள் இருக்கிறது .  ஆதலால் நீங்கள் தமிழில் எழுத விருப்பம் உள்ளவர்கள் தமிழை  செயல்படுத்துங்கள்

மற்றொன்றை சொல்ல விருப்புகிறேன் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் அதிகமாக தமிழை கலந்து எழுத கூடாது , சிறிய வார்த்தைகளை வேண்டுமானால் பயன்படுத்தலாம்


எதை குறித்து எழுதலாம் : 


               உதாரணமாக நான் என்னை பற்றி கூறி உங்களுக்கு விளக்கம் அளிக்கிறேன் .

     நான் 5 வருடங்களாக இசையை வாசித்து {Piano} வருகிறேன், எனவே நான் என்ன செய்தேன் என்றால் , இசையை எப்படி கற்றுக்கொள்வது  , மற்றும் அதன் நுட்பங்கள் ,விதிமுறைகள் பற்றி  எனக்கு தெரிந்தவற்றை தெளிவாகவும் சொந்தமாகவும் பதிவு { Post }எழுதி சம்பாதிக்கிறேன் , அது   எனக்கும் பயன்கொடுக்கிறது மற்றவர்களுக்கும்  பயன் கொடுக்கிறது . இது போல நீங்களும் உங்களது திறமைகளை பயன்படுத்தி சம்பாதிக்கலாம் . இதை எழுத்து வடிவில் மட்டும் அல்லாது வீடியோ வடிவிலும் தயார் செய்து சம்பாதிக்கலாம்

  நீங்கள் ஒரு வேலை சொல்லலாம் எனக்கு எந்தவித திறமைகளும் இல்லையே என்று . 

இந்த வகையை சேர்ந்தவர்கள் கீழ்காணும் முறையை பின்பற்றலாம் , பொதுவான ஒரு தலைப்பை குறித்து எழுதலாம் அதாவது

   1.  சென்னையில் என்னென்ன சுற்றுலா தளங்கள் உள்ளன
     
    2. அனைத்து விதமான போடோக்களை பதிவிறக்கம் செய்யும் தளமாக             ஆரம்பிக்கலாம்
        
   3.  அனைத்து மொழி செய்திதாள்கள் , பத்திரிக்கைகள் , போன்றவற்றை            உள்ளடக்கியது போன்றும் செய்யலாம்
      
  4.   உதாரணமாக : www.jcwebstar.com



பதிவை எழுதும் பொது அதன் விதிமுறைகளாவன : 


          1 . பதிவு மற்றும் அதில் உள்ள ஒவ்வொரு வரியும், புகைப்படங்கள் உட்பட அனைத்தும் உங்களுடையதாக இருக்க வேண்டும் .  மற்றவர்களின் இணையதளத்தில் உள்ள பதிவுகள் நன்றாக இருக்கிறது என்பதற்காக நீங்கள் அதை உங்களது இணையதளத்தில் Copy & Past செய்ய கூடாது

         2. நீங்கள் எழுதும்  பதிவு  மற்றும் கட்டுரைகள்  குறைந்தபட்சம் 250 க்கு மேற்ப்பட்ட வார்த்தைகளை {Words} கொண்டிருக்க வேண்டும்

         3.  முடிந்தவரை இலக்கண பிழையின்றி  எழுதுவது நன்று .ஆங்கிலமாயிருந்தாலும் & தமிழாயிருந்தாலும்



எப்படி ப்ளாகரில் பதிவை {POST} போடுவது 


முதலில் கீழ்கண்டவாறு பிளாக்கர் இணையதளத்தின் இடதுபுறமுள்ள   NEW POST என்பதை  கிளிக் செய்யவும்



பின்னர் உங்கள் பதிவின் தலைப்பை முதல் கட்டத்திலும் , இரண்டாவது கட்டத்தில் அதன் விளக்கத்தையும் நிரப்பவும் {கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளின் படி }பின்னர் PUBLISH  என்பதை CLICK செய்யவும் . அவ்வளவுதான் உங்களது பதிவு இணையத்தில் வெளியிடபட்டுவிட்டது


இதில் இரண்டாவது இருக்கும் SAVE என்பது எதற்கு என்றால் , நீங்கள் பதிவை எழுதி முடித்த பின்னர் PUBLISH என்பதற்கு பதிலாக SAVE என்பதை CLICK செய்தால்
பதிவு இணையத்தில் வெளியிடபடாமல் , சேமிக்கபட்டுஇருக்கும் பின்னர் நீங்கள் அதில்  எப்பொழுது வேண்டுமானாலும் எவ்வித திருத்தங்களை செய்து PUBLISH என்பதை CLICK செய்து வெளியிட்டுகொள்ளலாம்  


பிளாக்கர் இணையதளத்தின் வலதுபுறத்தின் மேற்பகுதியில் உள்ள LABELS என்றால் என்ன ? 



அடுத்து வலதுபுறத்தின் மேற்பகுதியில் உள்ள LABELS ல் நீங்கள் எழுதும் பதிவு எந்த வகையை சார்ந்தது என்பதை பிரித்துக்காட்ட உதவுகிறது

உதாரணமாக நான் இசையை குறித்த பதிவுகளையும் ,சமையல் குறித்த பதிவுகளையும் , வேலைவாய்ப்பு குறித்த பதிவுகளையும் எழுதுகிறேன் என்றால் , அதில் நான்

     இசையை குறித்த பதிவுகளுக்கு LABELS பகுதியில் MUSIC என்றும்

     சமையல் குறித்த பதிவுகளுக்கு LABELS பகுதியில் COOKING என்றும்

     வேலைவாய்ப்பு குறித்த பதிவுகளுக்கு LABELS பகுதியில் JOB OFFERS என்றும் குறிப்பிடுகிறேன்

ஆகமொத்தத்தில் உங்களது வலைதளத்தில் பல வகைப்பட்டபதிவுகள் இருக்குமாயின் அதை பிரித்து தனி தனி வகைகளாக வாசகர்களுக்கு காட்ட இது  உதவுகிறது

எனவே இதில் உங்களது பதிவின் பிரிவை நிரப்பி DONE என்பதை CLICK செய்யவும்

PERMA LINK என்பது என்ன ?


 இது உங்களது பதிவிற்கு நீங்களாகவே உங்களது விருப்பம் போல் URL லை மாற்றி அமைக்கும் வசதியை கொடுக்கிறது
இதற்க்கு நீங்கள்  PERMALINK என்பதை CLICK செய்து அதினுள் உள்ள  CUSTOM PERMA LINK என்பதை CLICK செய்து உங்களது பதிவிற்கேற்ப்ப அமைத்துகொள்ளலாம்




இனி அடுத்த பதிவில் பார்ப்போம் .........

பிளாக் என்றால் என்ன ? பிளாக்கை எப்படி தொடங்குவது ? - What is Blog ? How to creat a blog?

0

பிளாக் என்றால் என்ன ? பிளாக்கை எப்படி தொடங்குவது ? - What is Blog ? How to creat a blog?


முதலில் பிளாக் என்றால் என்ன ?


         பிளாக் என்பது Facebook மாதிரியே தான் , நீங்கள் உங்களுக்கு தெரிந்த விபரங்களை {சமையல் , அழகுகளை , இசை , நுட்பங்கள் போன்ற பல } எழுத்து வடிவில் எழுதி அதை இணையதளத்தில் வெளியிடலாம்.

நீங்கள் எழுதியதை வெளியிட இணையதளத்தில் ஓர் இடம் வேண்டும் அதற்க்கு தான் பிளாகர் உதவுகிறது . இந்த பிளாகர் இலவசமானது ,இதை போற்று பல உள்ளன . அவை எல்லாமே பணம் செலுத்தி இயக்க கூடியது

பிளாகர் மூலம் எப்படி வருமானம் சாத்தியமா ?


      உங்களுக்கு தெரிந்த விபரங்களை நீங்கள் வெளிட்டஉடன் அது இணையத்தில் பதிவாகிவிடும்

      பின்னர் அந்த விபரங்களை வேறொருவர் {பலர் } படிக்க வரும்போது உங்களுக்கு வருமானம் நிச்சயம்

குறிப்பாக இதில் யாருடைய தயவும் தேவையில்லை உங்களுடைய உழைப்புமட்டும் போதுமானது 

பிளாக்கை எப்படி தொடங்குவது ?

முதலில் நீங்கள் இந்த இணையமுகவரிக்கு செல்க  https://www.blogger.com/


உங்களது ஜி மெயில்-லை மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்க { Enter Your Gmail Account Mail Address And Password } . உங்களுக்கு  Gmail Account இல்லை என்றால் உருவாக்கி கொள்ளவும்  


பின்பு உங்களுக்கு கீழ்கண்டவாறு தோன்றும் . அதில் NEW BLOG என்பதை CLICK செய்யவும் 

பின்பு நீங்கள் தொடங்கும் ப்ளாக்  சார்ந்த தலைப்பை கொடுக்கவும் பின்பு , இரண்டாவது ஆப்ஷன் -ல்  உங்களுக்கு விருப்பமான மற்றும் உங்களது ப்ளாக் சார்ந்த படி இனைய முகவரியை {Website URL }கொடுக்கவும் .பின்னர் CREAT BLOG ! என்பதை அழுத்தவும்



அவ்வளவு தான் கீழ்கண்டவாறு உங்களது ப்ளாக் தொடங்கப்பட்டுவிட்டது 

இனி அடுத்த படத்தில் இதன் மற்ற தொடர் விபரங்களை பார்போம்




பிளாகர் {Blogger} மூலம் பணம் சம்பாதிக்க என்னென்ன திறமை மற்றும் உபகரணங்கள் தேவை -What are the skills and equipment needed to earn money by Blogger In Tamil

0
Earn Money From Blogger In Tamil

பிளாகர் {Blogger} மூலம் பணம் சம்பாதிக்க என்னென்ன திறமை மற்றும் உபகரணங்கள் தேவை ? 



பிளாகர் {Blogger}மூலம் பணம் சம்பாதிக்க ஓரளவு திறமையும் சில உபகரணங்கள் போதுமானது
அவையாவன :
திறமைகள் :

       1 . ஓரளவு தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும் { Typing Knowlege} .

       2. ஓரளவு இணையதள அறிவு ,அதாவது நீங்கள் -----  போற்றவற்றை பயன்படுத்துவராயின் இது உங்களுக்கு இலகுவாக இருக்கும்  . {Browsing Knowlege}

       3. உங்களிடம் உள்ள திறமைகளை மற்றவர்களுக்கு பகிரும் தன்மை , அதாவது நீங்கள் நன்றாக சமையல் செய்பவராயின் அதை நீங்கள் இதில் உபயோகப்படுத்தலாம் .

       4. மிக முக்கியமாக நீங்கள் உழைப்பாளியாக இருத்தல் நன்று . {இந்த வேலை One Click பணம் சம்பாதிக்கும் போல பொய் வேலை அல்ல , சிறிதளவு உழைப்பு தேவை } (HardWork)

உபகரணங்கள் :

        1. கணினி அல்லது மடிகணினி அல்லது    கடைசி பட்சமாக   Android Phone

        2. இன்டர்நெட் வசதி {2G-Speed  போதுமானது }

        3. நேரம்  {Time}


மேற்க்கண்டவை இருந்தாலே நீங்கள் பிளாகர் {Blogger}மூலம் பணம் சம்பாதிக்க தகுதி உடையவர் . இனி அடுத்த பதிவில் எப்படி இதை செயல்முறை படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம்


இனி புத்தகங்களை படிக்க அலையவோ பணம் செலுத்தவோ தேவையில்லை-Free Online Magazines And Books

0

உலகத்தில் பலவிதமான மக்கள் இருக்கின்றனர் , அவர்களுக்கு பல விபரங்கள் தேவைபடுகின்றன. உதாரணமாக ஓர் அழகு நிலையம் நடத்தும் நிறுவனர் , அழகுகலையை கற்க பல புத்தகங்களை பணம் செலுத்தி படிபார்கள் . அவர்களில் பலருக்கு புத்தகங்களோ கிடைப்பதில்லை . இப்படி பட்டவர்களுக்கு ஓர் இன்ப செய்தி  இந்த இணையத்தில் இலவசமாக அனைத்து விதமான புத்தகங்கள் மற்றும் வார இதழ்கள் வரிசை படுத்தபட்டுள்ளன மேலும் அறிய